Tuesday, August 2, 2011

மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்


(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 28:85

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.


இப்படி வெளியேற்றப்படும் ஒருவர் “வெளியேற்றிய ஊருக்கு வந்து அதை ஆள்வார்; அவருக்குச் சாதகமான நிலை ஏற்படும்” என யாரும் கற்பனை கூட செய்ய முடியாது.

ஆனால் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்குப் புறப்பட்டதைப் பற்றிப் பேசும் போது எந்த இடத்தை விட்டு விரட்டினார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு செல்வேன் என்று முன்னறிவிப்பு செய்கிறது. இந்த முன்னறிவிப்பை உலகறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னார்கள்.

சில வருடங்களிலேயே விரட்டப்பட்ட ஊருக்குச் சென்று அதை வெற்றி கொண்டு அவ்வூரைத் தம் வசப்படுத்திய இந்த நிகழ்ச்சியை, விரட்டப்படும் போதே திருக்குர்ஆன் முன்னறிவிப்பாகச் சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்
 (சிந்திப்பவனுக்கு படிப்பினையுண்டு-முஸ்லிம் அகதி).

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.