Tuesday, November 9, 2010

முல்லைத்ததீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அவலங்கள்-2

மேறகூறிய தலைப்பின் கீழ் முன்னர் ஒரு இடுகையை பார்ததிருப்பீர்கள். முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் 1987 ம் ஆண்டு இந்திய சமாதானப்படை முல்லைத்தீவுக்கு வருகைதந்தபோது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அதே ஆண்டு கார்த்திகை மாதம் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக 45 மைல்கள் கடந்து வவுனியாவை வந்தடைந்தனர்.வரும்வழி நெடுங்கேணியில் சில சகோதரர்களை இந்திய இராணுவத்தின் ஹெலியிலிருந்து ஏவப்பட்ட செல் மூலம் இழக்க நேரிட்டது. 1989ம் ஆண்டு மீள்குடியேற்றமென்றபெயரில் குடியமர்ந்தனர். பின்னர் ஒருவருடத்தினுள்(1990 ஜூலை) அகதிகளாக புத்தளத்தை வந்தடைந்தனர்.1987ம் ஆண்டு ஐக்கியதேசிய கட்சி ஆட்சியிலேயே அகதிகளானோம்.அப்போது எதிர்க் கட்சியாவிருந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரான நமது முஸ்லிம் சகோதரர்கள் எம்மை வவுனியா தொடக்கம் மத்திய மலை நாடுவரை அழைத்துச்சென்று அப்போதை அரசிற்கு எதிராக எம்மைப்(அகதிகளை)பயன்படுத்தி இலாபமடைந்ததை அன்றைய முல்லைத்தீவு அகதிகள் மறந்திருக்கமாட்டார்கள்.
எம்மைவியாபாரப் பொருளாக பயன்படுத்துவதை உணர்ந்த நாம் புத்தளத்தை நோக்கி வந்ததின் காரணமாக அமைதியாக வாழக்கூடிய நிலைமை ஏற்பட்டது.1990 ம் ஆண்டு நாம் எங்கும் செல்லவில்லை. நேரடியாக பழக்கப்பட்ட மாவட்டமாகவும்,அறிமுகமுடைய பல நண்பர்களைக் கொண்டதுமான புத்தளத் திற்கு மீண்டும் வந்து சேர்ந்தோம். முதற்கண் எல்லாம்வல்ல அல்லாஹ் விற்கும் அடுத்து புத்தளம்வாழ் மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள் ளோம். அன்றுபோல் இம்முறையும் அரசியல்வாதிகளாலும்,அரசசார்பற்ற நிறுவனங் களாலும் விற்கப்படுவது அகதிகள் அறியாததொன்றல்ல.ஆயினு்ம் எல்லாவற் றையும் அல்லாஹ்விடம் பொறுப்புச்சாட்டியவர்களாக அகதிகள் இருக்கின்றனர்.
இப்போது நாட்டில் யுத்தநிலைமை மாறியதன் காரணமாக வடமாகாண முஸ்லிம்கள் தமது சொந்த ஊர்களில் அவர்களின் வசதிகளுக்கேற்ப மீள்குடியமர செலகின்றனர்.இப்போது அவசரமாக நமது புத்தளத்தினுடனான தொடர்புகளை துண்டிக்கும்படி யார்?யாரோ அகதிகளை பலவிதமான கதைகளைக்கூறி துரத்துகின்றார்கள்.அவர்கள் அன்சாரிகளல்ல முஹாஜிரீன்களதான். (அகதிகள் ) வடமாகாணத்தின் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து 1990ம் ஆண்டு முஸ்லிம்கள் புத்தளத்திற்கு அகதிகளாக வருகைதந்தனர். அதில் வவுனியாவைச்சார்ந்தவர்களில ஒரு பகுதியினர் யுத்தகாலத் திலேயே மீளவும் குடியமர்த்தவிட்டனர்.மன்னார் தீவினுள்ளும் ஒருபகுதினர் மீள்குடியமர்ந்துவிட்டனர்.தீவிற்கு வெளியிலும் நு-ற்றுக்கணக்கானவர்கள் சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்திலும் சிலர் தமது வியாபாரநடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.கிளிநொச்சியும்,முல்லைத்தீவும் அப்படியல்ல.பிரதான யுத்தப் பிரதேசங்களாக விளங்கியது.
குறிப்பாக முல்லைத்தீவு முஸ்லிம்கள் அதிகமானவர்கள் விவசாயம் செய்யக் கூடியவர்களாகவும்,இன்னும் சிலர் சிறுகடல்,குளங்களில் மீன் ,இறால் பிடித்து தமது ஜீவனோபாயத்தை நடத்தக்கூடியவர்களாகவும்,மற்றும் சிலர் கூலியாட்களாகவும்,ஒருசிலர் பலதரப்பட்டட வியாபாரத்தினை செய்யக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர்.இன்றைய மீள்குடியேற்றம் முல்லைத்தீவு மாவட்ட அரசியலாளர்களினாலும். சமூகத் தலைவர்களாலும் கூடி ஆராயப்படாமல் நடப்பதாவே புலப்படுகின்றது. முல்லைத்தீவில் முஸ்லிம்கள் முத்தையன்கட்டு குளத்திற்குட்பட்ட மீள்குடியமர்வு பொருத்தமாக இருக்கின் றதெனலாம். காரணம் அவர்களுக்கு உடனடியாக விவசாயம் செய்ய வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் அதிகமான முஸ்லிகளுக்கு தண்ணீர்முறிப்பு,குளத்தின் கீழ்தான் விவசாயக்காணிகள் இருக்கின்றது. அங்குள்ள வெடிபொருட்கள் இன்னும் அகற்றப்படவில்லை.மேட்டுநிலப்பயிர் செய்யக்கூடிய இடங்களான முறிப்பு, கொத்தியாகும்பம், பு-தன்வயல் போன்ற இடங்களில் இப்போதுதான் வெடிபொருட்கள் அகற்றும்பணி தொடங்கப் பட்டுள்ளது.ஆகவே மீள்குடியமர்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உலருணவு வழங்கப்படுவது வழக்கமாகும். அதில் ஒருமாத உலருணவு ஒரு கிழமைக்குப் போதாததாகும். அதன் காரணமாகத்தான் ஆண்களுக்கு தொழிலில்லாத காரணத்தினால் புத்தளத்தில் அதிகளவிலானஅகதிப் பெண்கள் கூலித்தொழிலுக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள். ஆனால் முல்லைத்தீவிவு யுத்த பிரதேசமானபடியால் கூலிவேலகூட இப்போதைக் கில்லை. மழையை எதிர்பார்த்துச்செய்யக்கூடிய மேடடுநிலப்பயிர்ச் செய்கை பண்ணுவதற்காக நிலங்களைச்சுத்தப்படுத்தி பண்படுத்துவதற்கும் காலஅவகாசம் போதாது. தண்ணீர்முறிப்பு காலப்போகம் செய்ய முஸ்லிம்களின் காணிகளுள்ள பிரதேசங்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை. (காரணம் வெடிபொருள் அபாயம்)முஸ்லிம்கள் மீன்பிடித்து வந்த இடங்களில் தற்போது பெரும்பாண்மை சமூகத்தினரும் மீன் பிடிப்பதால் அவற்றிலும் மீன்களில்லை. சில பிரதேசங்களுக்கு மீன்பிடிக்கப்போக முடியாத தடையும் காணப்படுகின்றது.
தமிழ் சகோரதர்களாவது அங்கிருந்திருந்தால் அவர்களிடமாவது கூலி வேலை செய்ய முடியும். அவர்களும் இப்போதைக்கு எம்மைவிட மோசமாக பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலைமை முல்லைத்தீவு முஸ்லிம் களுக்கு ஏன் புரியவிலலை.
கடந்த ஜூன் மாத முற்பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்னர் செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றி உரியவர்களுக்கு எம.எஸ்.பரீத் அவர்களினால் ஆலோசனை வழங்கிய கடிதத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இன்றைய நிலையில் முல்லைத்தீவு முஸ்லிம்களை மீள்குடியேற்றத் திற்காக வற்புறுத்துவது பொருத்தமில்லை.முல்லைத்தீவு முஸ்லிம்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் குடியமர்வதுதான் பொருத்தமான காலமாக முஸலிம் அகதி கருதுகின்றது் காரணம் 2011 ம் ஆண்டு மேட்டுநில மற்றும் நீர்ப்பாய்சல் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசமுள்ளதுடன்,தற்போது அரசினால் குளங்களில் விடப்பட்ட மீன்குஞ்சுகளும் பிடிக்கக்கூடிய வளர்ச்சியை அடைந்துவிடும்.இக்காலத்தில் குடியமரக்கூடியவர்கள் பொருளாதாரப்பிரச்சினைகளுக்கோ மனஅழுத் தங்களுக்கோ உள்ளாக மாட்டார்களென முஸ்லிம் அகதி நம்புகின்றது.

முலலைத்தீவில் மீள்குடியமரும்போதிலான பதிவுகளுடன் குடும்பமாக புகைப்படமும் எடுப்பதற்கும் தயாராகப்போகவேண்டும். பிரதேசத்தின் பாதுகாப்பை இராணுவம் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது.ஏனைய மாவட்டமக்களை புகைப்படம் பிடிப்பதில்லையாம்.

இதெல்லாம் தற்போது முல்லைத்தீவு முஸ்லிம்களை குழப்பத்திற்குள்ளாக்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.