Saturday, November 13, 2010

முல்லைத்தீவு மாவட்டமுஸ்லிம்கள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக அங்குள்ள ஏனைய சமூகத்தினர் அதிர்ப்தியடைந்துள்ளனர்.

மேற்படி தலைப்பில நேரடியாக எழுதாமல் வேறு தலைப்புக்களில் முன்னர் சில இடுகைகளை வெளியிட்ட ”முஸ்லிம்அகதி”இபபோது நேரடியாக உரிய சில விடயங்களை ஆராய விரும்புகின்றது.

1 வது காணி விற்பனையும்,திரும்பக்கோருதலும்,அத்துமீறிகுடியிருத்தலும்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் முல்லைத்தீவிலுள்ள ஏனைய சமூகத்தின ருடன் மிகவும் கன்னியமாக வாழ்ந்தவர்கள்.கடந்தகாலத்தில் முஸ்லிம்களை விடஏனைய சமூகத்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாகக் காணப்பட்டனர்.இதன் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்போது முஸ்லிம்கள் அவர்களது காணி களை ஏனைய சமூகத்தவர்களுக்கு ”நம்பிக்கையறுதி” என்ற முறையில் உறுதி யெழுதிக்கொடுத்து பணம் பெறுவதும் பின்னர் பணம் வந்ததும் காணியை மீட்டுக் கொள்வதும் வழக்கமான விடய மாகும். காணியைப்பெற்றுப்பணம் கொடுப்பவர் கள் நினைத்தால் காணியை திரும்பக்கொடுக்காமல் மறுக்கலாம்.காரணம் சட்டப்படி காணிக்குரிய ஆவணம் அவர்களுக்கு வழங்கித்தான் பணம் பெறுவது வழக்கம்.அப்படி அவர்கள் மாறுசெய்வதில்லை.சிலநேரங்களில் முஸ்லிம்கள் வட்டிவழங்கியுள்ளனர். சமூக ஒற்றுமைக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.1990ம் ஆண்டு முஸ்லிம்கள் முல்லைத்தீவைவிட்டு வெளியேறும்போது தமது பொருட்கள் சிலவற்றை அவர்களது நண்பர்களான ஹிந்து,கிருஷ்தவ சகோதரர்களது வீட்டில் ஒப்படைத்துவிட்டு வந்தவர்களுடமுண்டு.
வடமாகாணத்திற்கு வெளியேவந்த முஸ்லிம்கள் சுமார் ஐந்து வருடங் களாக தமது மண்ணுக்கு திரும்புவோம் என்ற மனஉறுதியுடன் வாழ்ந்தனர். அதன் பின்னரே தமது பணத்தைக்கொண்டு ஐந்து,பத்து பேர்சஸ் காணித்துண்டுகளைப் பெற்று தனியான வீடுகளிலும்,குடிசைகளிலும் வாழத்தொடங்கினர். அவர்கள் மனதில் முல்லைத்தீவு காணிகளைப்பற்றியோ?பொருட்களைப்பற்றியோ கவலை யில்லை.காரணம் அவர்களுக்கு வல்ல அல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிககையும் வந்தஇடத்தில் கிடைத்த கண்ணியமுமாகும்.அத்துடன் மக்காவிலிருந்து மதீனாவிற்குஹிஜ்றத்சென்ற மஸ்லிம்கள் மக்காவிலிருந்த அவர்களின் செல்வங்களை மட்டுமல்ல உடலில் ஒட்டியிருந்த துர்சியைக்கூடதட்டிக்கொட்டிவிட்டுச் சென்றவர்கள்மதீனாவில்மாபெரும் செல்வந்தர்களாக வாழ்ந்ததுமட்டமல்லாது.மதீனாவிலுள்ளவர்களின் மனதை வென்றார்கள்.சிலகாலங்களின் பின்னர் ஹிஜறத் சென்ற முஸ்லிம்கள் மீளவும் மக்காவையும் வெண்றார்கள் என்ற உண்மை தெரிந்தவர்களாவும் இருந்தார்கள்.. சமாதான காலமாக மக்கள் கருதிய 2004 ம் ஆண்டு முல்லைத்தீவு முஸ்லிம்களும் தமது கிராமங்களை, வீடுகளைப் பார்க்கச்சென்றனர். அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளினாலும்,முஸ்லிமல்லாத இடம்பெயர்தவர்களினாலும் பயன்படுத்தப்பட்ட முஸ் லிம்களின் வீடுகள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஏனையவர்களின் வீடுகளை உடைத்து பாதுகாப்பு அரன்கள் அமைத்தாலும் பரவாயில்லை.முஸ்லிம்களின் வீடுகளை உடைத்துச சென்று மாடிவீடு கட்டியதும்,அடுத்தவீட்டுக்காரன் தனது மண் வீட்டை கல்வீடா க்கிய விடயமும் அவர்கள்மூலமே அறிய முடிந்தது.உண்மை யான சம்பவமாகும்.அவர்கள் அப்படிக்கட்டிய வீடுகளிள் அவர்களினால் என்றும் நிம்மதியாக வாழமுடியாதென்பது இவர்களின்நம்பிக்கை.
இக்காலத்திலதான் இஸ்லாமிய மார்க்கத்தை விளங்காத.தெரியாத சமூகப் பற்றில்லாத ,குறுக்குவழியில் பணம் சேர்க்கஆசைப்படுபவர்களும் முல்லைத்தீவிற்குச் சென்றனர்.இவர்களுடன் ஊர்பார்க்கச்சென்றவர்கள்(பாதுகாக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள்) தமது வீடுகளை விட்டுவைத்தால் ஏனைய முஸ்லிம்களின் வீடுகள் போன்று களவாடப்ட்டு விடும் என ஊகித்தனர்.எனவே இவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்ததில் தமது பிள்ளைகளின் வாழ்டவை மேம் படுத்தமுடியுமென எண்ணி விற்கமுடிவெடுத்தனர்.சில் வீடுவிற்ற பணத்தைக் கொண்டு இஸ்லாமியரின புனிதக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றினர். எதுஎப்படியிருப்பினும் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள காணிகளை விற்றவர் களைஎதிர்கால்ம் மறக்காது.இவர்களைப்பின்தொடர்ந்து அகதிகளாக வாழ்ந்த எழைகளும் தமது பங்கிற்கு காணிகளை விற்கத்தவறவில்லை.தமது பரம்பரை காணிகள் பறிபோவதை எண்ணி சிலர் மனம்வருந்தினார்கள்.ஆசிரியர் எஸ.எச். எம். றிஸ்னி,எம்.எஸ.பரீத் போன்றோர் காணி விற்பதை எதிர்தது பிரச்சாரம் செய் தார்கள். துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டனர்.விற்பதை தடுக்க முடியவில்லை. வாங்குவதை தடுக்கும்படி வேண்டி உரியவர்களுக்கு கடிதங்களும் எழுதினார்ர் கள் அதற்கும் நல்ல பதில் கிடைக்கவில்லை.மாறாக தமிழீழவிடுதலைப்புலிகள் கூட்டங்கள்வைத்து முஸ்லிம்களின் காணிகளை என்னவிலை கொடுத்தாலும் வாங்கும்படி தமது சமூகத்தினரை வலியுறுத்தினார்களாம்.இதற்கு சில புத்தி ஜீவிகளும் மறுப்புத்தெரிவிக்காமலில்லை.முஸ்லிம்கள் மீண்டும் இங்குவந்து வாழவேண்டுமெனவும் கூறினார்களாம்.புலிகளின் பணிப்புரைகளை ஏற்றுக்கொண்ட சிலர் அங்கிருந்த குறுக்குவழியில் பணம்சம்பாதிக்க முயலும் நம்மவரை புரோக்கர்களாக்கி புத்தளத்திலுள்ள முஸ்லிம்களின் முல்லைத்தீவு காணிகளை வாங்கத்துடித்தனர்.இதனை தமக்குச்சாதகமாகப்பயன்படுத்த புரோக்கர்கள் தவறவில்லை. சிலர் நேரடியாகச்சென்று தமது முன்னோர்களின் காணிகளை இனங்கண்டு தனது அடுத்த பங்காளிக்கும் தெரியாமல் காணியை காசாகிவிட்டிருந்தனர்.சிலர் தமது காணியை முறையாக விற்றுள்ளனர்.சிலர் காணிக்கு முற்பணம் மட்டும் வாங்கியுள்ளனர.முற்பணம் கொடுத்தவர்களிடம் எந்த ஆதாரமும் இலலை.புரோக்கரகள் காணிகளின் புகைப்படப்பிரதிகளை காட்டி தமது பொக்கட்டுகளை நிரப்பியதாகத் தெரிகிறது.உதாரணத்திற்கு நுர்று ரூபாய்க்கு காணி வாங்கியவர் புரோக்கருக்கு கொடுத்த பணம் நுர்ற்றுப்பத்து ரூபாய் புத்தளத்தில் காணிக்காரனுக்கு கிடைத்ததோ வெறும் ஐம்பது ரூபாய் மடடுமே.சில புரோக்கர்கள் ஒவ்வொரு காணியும் விற்பதாக காட்டி முற்பணம் வாங்கிய கதையுமுள்ளது.காணியைப்பார்க்காமலேயே இலட்சக்கணக்கில் முற்பணம் கொடுத்துவிட்டு புரோக்கரை தேடித்திரியும் அன்பர்களையும் முல்லைத்தீவில் காணமுடிகிறது.ந்தக்காலத்தில் அவர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அவர்கள் மீறவிலலை.இன்று முஸ்லிம்கள் அதை விளங்காது அவர்களுக்கு துரோகத்தனம் செய்வதனை இஸ்லாமும் ஏற்க வில்லை. இஸ்லாமியனாலும் ஏற்க முடியாது. இச்செயற்பாடுகளுக்கு முஸ்லிம் களை மட்டும் குறைகாண்பது நியாயமாகத் தெரியவிலலை.காணி வாங்கிய வர்களுள் சிலர் தந்திரத்துடன் செயற்பட்டிருக்கின்றனர். புலிகள் சொல்லி விட் டார்கள் உறுதி,நோட்டு ஒன்றும் தேவையில்லை. அதுஎல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்றிருந்தவர்களுமுண்டு.எரியும் வீட்டில் பிடுங்குவதுதான் மிச்சம என்பது போல இவர்கள் இனி இங்கு வரமாட்டாகளென்றெண்ணி பத்து ரூபா பெறுமதியான காணியை இரண்டு ரூபாய்க்கு வாங்கியவர்களையும் காணமுடிகிறது.காணிக்கு ஒருசிறு தொகையை முற்பணமாகக் கொடுத்து விட்டு வீடு கட்டியவர்களையும,திருத்தி குடியிருப்பவர்களையும் காணமுடிகிறது.
தற்காலிக உத்தரவுப்பத்திரம் உடையவர்களின் காணிகளும் வாங்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இன்யறைய நிலையில் அங்கு போனவர்கள் வாங்கிய முற்பணத்தை தருவதாகவும் காணியை விடும்படியும்,சிலர் இதில் எனக்கு பங்குக்குண்டு என அக்காணியில் குடிலமைத்து குடியிருப்பதையும்,சிலர் காணியிலுள்ள மரத்தை விற்று உன்பணத்தை தருவதாக முட்டாள்த்தனமான பதிலையும்,சில காணிகள் சார்பாக இருசாராரும் இணக்கப்பாட்டுடன் செயலாற்றுவதையும் அவதானிக்க முடிகிறது.இச்செயற்பாடுகள் காரணமாக எல்லா முஸ்லிம்களின் பெயர்களும் நாறடிக்கப்படுகின்றன.இது நியாயமில்லாததொன்றாக முஸ்லிம் அகதி கருது கின்றது.இப்படியான நிலைமை வருமென உணர்ந்த முஸ்லிம் அகதி 2010.06.01ம் திகதிய கடிதமூலம் அரசாங்க அதிகாரிகள்,அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்கள்,வணக்க வழிபாட்டுத்தலங்களின் தர்மகர்த்ததாக்கள்,பாடசாலை அதிபர்களென பலருக்கும் ஆரூடம் வழங்கியதை எவரும் கண்டு கொள்ள விலலை.அதற்காக அவர்களிற்சிலர் இன்று துக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும். அக்கடிதத்தை இத்தளத்திலும் பார்வையிடலாம்.இப்படியான நிலைமைகள் காரணமாக மனட்சாட்சியுடைய பல முஸலிம் அகதிக்குடும்பங்கள் தமது தாயக மண்ணிற்கு போவதை தவிர்த்துக்கொள்வதாக தெரிகிறது.
காணிப்பிரச்சினைகளைப்பொறுத்தவரையில் இருசமூகத்தைசார்ந்த புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழுவொன்றினை அமைத்து அவற்றிற்கு நியாயமான தீர்வுகள் காணப்படுவது அவசியமாகும்.கட்டுப்படாதவர்களை பொலீசில் ஒப்படைப்பது இக்குழுவின் பணியாகவும் இருக்கவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் மரணவீடாகக் காட்சியளிக்கின்றது.மரணவீட்டில் பங்குச்சண்டைபோடுவது நியாயமாகுமா?
சிந்தித்து செயலாற்றுக.
முல்லைத்தீவில் முஸ்லிம்களால் விற்கப்படாத வீடுகளில்பல முஸ்லிம்களல்லாத இடம் பெயர்ந்தவர்களினால் பாவிக்கப்பட்ட வீடுகள் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டேன். இவ்வீடுகளும் இறுதி யுத்த காலத்தில் பாரிய குண்டுகள் மூலம் தகர்க்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.ஆனால் முஸலிம்களால் முஸ்லிமல்லாதவர்களுக்கு விற்கப்பட்ட பக்கத்திலுள்ள வீடுகள் பாதுகாப்பாக இருப்பதையும் காணமுடிகிறது.முஸ்லிம்களின் வீடுகள் தகர்கப்பட்டமைக்காக அங்கிருந்தவர்கள் கூறும் காரணம் புலிகள் பாவித்த வீடுகளாம்.அங்கு விடுதலைப்புலிப்பிரமுகர்களின் புகைப்படங்களிருந்ததாம்..

முஸலிம் அகதிகளே! நீங்கள் வாழ்ந்த,அல்லது வாழும் வீடுகளெல்லாம் இங்கு உங்களுக்கு அற்பமானவையே! நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழும்வரையில் நீங்கள் சோதனைக்குட் படுத்தப்படலாம்.அதுவே நிரந்தரமான சோதனையுமல்ல! தோல்விகளுமல்ல! நிச்சயமாக வெற்றி இங்குமட்டுமல்ல மறுமையிலும் காத்திருக்கிறது. உண்மையான முஸ்லிம்கள் எந்தவிதமான சதிகாரர்களுக்கும் அஞ்சத்தேவையில்லை.எப்போதும் வெற்றிகளை சதிகாரர்களினால் பெறமுடியாது.அவர்களின் சதித்திட்டங்கள் அவர்களுக்கே வினையாக முடியும்.
நன்றிகள் உங்களுக்கு புகளனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு மட்டும்
முஸ்லிம் அகதி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.